2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாகரையில் திரிய பியச துரித வீடமைப்பு வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 ஜூன் 28 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புச்சாக்கேணி கிராம சேவகர் பிரிவில் திரிய பியச துரித வீடமைப்பு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலாளர் எஸ். ஆர். ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்;நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.யோகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்தகொண்டார்.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட 6 பயனாளிகளுக்கு வீட்டு திருத்த வேலைகளுக்காக முதற்கட்டமாக 40,000 ரூபாய் பெறுமதியான காசோலையினை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன்  வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் எஸ் ஆர் ராகுலநாயகி, வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தேவமனோகரி பாஸ்கரன்,  தலைமை முகாமையாளர் கே. பற்குணராஜா, வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் கிராமத்திற்கான உத்தியோகத்தர் ஐ. அருள்ஜோதி, கிராமத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. கோமேஸ்வரன் வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களான டி. தினகரன்பிள்ளை, எஸ். சிவசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .