2025 மே 16, வெள்ளிக்கிழமை

உலக வங்கி தேசிய திட்டத்துக்கு கடன் அளிக்க ஒப்புதல்

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

உலக வங்கியின் நிதிச் சபை இலங்கையில் ஆரம்ப பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான தேசிய திட்டத்துக்கு ஆதரவளிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் அளிக்க ஒப்புதல் அளித்திருப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இலங்கையில் ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி சேவைகள் சமத்துவமாக அணுகுதல், பின்தங்கிய குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்புகளை பயனுள்ளதாக அதிகரிப்பதற்கும் உலக வங்கி 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க ஒப்புதலளித்துள்ளது.

நீண்டகால உலக பொருளாதாரத்தில் மேலும் போட்டித்தன்மை பெற்று இலங்கையில் மனித மூலதன வளர்ச்சிக்குப் பங்களிக்கும் நோக்குடன் இந்த கடனுதவித் திட்டம் வழங்கப்படுகின்றது.

நாட்டின் நீண்ட கால வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், மனித மூலதன உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஆதரவு உதவித் திட்டம் அமைந்துள்ளது.

இலங்கை  அரசாங்கம் அண்மையில் குறிப்பாக 0-5 வயது வரை உள்ள குழந்தைகள் வளர்ச்சி மற்றும் நன்மைக்காக ஊக்குவிக்க குழந்தை விவகார அமைச்சரவையை நிறுவி அதனூடாக ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி (2015-2020) தேசிய வரைவுத் திட்டத்தினை உருவாக்கியுள்ளது.

குழந்தைப் பருவ வளர்ச்சிப் போக்கு வயது 5 ஆண்டுகள் கருத்தாக்க காலமாகக் கருதப்படுகின்றது. 

இதில் 0-2 வயது வரையான குழந்தை வளர்ச்சியில் கண்காணிப்பிலும் முகாமைத்துவ இலங்கையில் நன்கு திட்டமிட்டு நிறுவப்பட்ட சுகாதாரத்துறை முக்கிய பங்காற்றியிருப்பது ஒரு மைல் கல்லாகும்.

அதேவேளை 3-5 வயது வரம்பில் உள்ள குழந்தைகள் விடயத்தில் குறைந்த வளர்ச்சிப் போக்கை குறித்து நிற்கின்றது.

இலங்கையில் 17020 ஆரம்பப் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களில் 29,340 ஆசிரியர்களுடன் சேவைகள் இடம்பெறுகின்றன. இந்த மையங்களில் சுமார் 84 சதவீதமானவை அரச பராமரிப்பில் கீழ் இல்லாதவையாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .