2025 மே 16, வெள்ளிக்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஆராய குழு நியமனம்

Princiya Dixci   / 2015 ஜூன் 30 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை பிரிவில் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக்குழுவொன்று நேற்று திங்கட்கிழமை (29) நியமிக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபை பிரிவில் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான விடயங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி; யு.எல்.நசிர்தீன் மற்றும்  காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .