2025 மே 16, வெள்ளிக்கிழமை

வறிய குடும்பங்களின் வாழ்வதார மேம்பாட்டுக்காக கூட்டு வறுமை ஒழிப்பு திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 01 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலும் அதனை சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களிலும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  குடும்பங்களின் வாழ்வதார மேம்பாட்டுக்காக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கூட்டு வறுமை ஒழிப்பு திட்டம் பெரும் பங்காற்றுகின்றது என சம்மேளனத்தின் கூட்டு வறுமை ஒழிப்பு திட்டக்குழுவின் செயலாளர் ஏ.எம்.சாதிக்கீன் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் நேற்று (30) செவ்வாய்க்கிழமை மாலை சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'இந்த கூட்டு வறுமை ஒழிப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை 16 கோடியே 42 இலட்சத்து 36018 ரூபாய் பணம் சேகரிக்கப்பட்டது. இப்பணத்தின் மூலம் 1624 வீடுகள் திருத்தப்பட்டுள்ளன. அத்தோடு 618 மலசலகூடங்கள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 993 பேருக்கு தொழிலுக்காக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 469 பேரின் கடன்களை அடைக்கவும் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு 299 பேருக்கு வாழ்வதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு சிகரம் கிராமத்தில் 55 இலட்சம் ரூபாய்க்கு காணியொன்று கொள்வனவு செய்யப்பட்டு அதில் 13 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வீட்டு வசதியற்ற வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று மண்முனையிலும் காணியொன்று கொள்வனவு செய்து வீடுகள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு மேலும் பங்களிப்புக்கள் கிடைக்குமாயின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .