Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம்.நூர்தீன்
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு பஷீர் சேகுதாவூத்துக்கு கட்சித்தலைமை இடமளிக்கக் கூடாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான், நேற்று செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸில் பஷீர் சேகுதாவூத் போட்டியிடுவதற்கு கட்சித்தலைமை இடமளித்தால் தானும் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர், விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் முகவரி தேடித்தந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கான வியூகத்தையே பஷீர் சேகுதாவூத் நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்றுவரை வகுத்திருந்தார் என்பதை கட்சித் தலைமை மாத்திரம் அன்றி முஸ்லிம்கள் அறிவார்கள். இவர் போன்ற அரசியல் வியாபாரிகளின் கபட நாடகங்களால் முஸ்லிம் சமூகத்தை இனி ஒருபோதும் ஏமாற்ற முடியாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்காது முஸ்லிம் சமூகத்துக்கு மஹிந்த அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்திருந்தும் தான் வகுத்த வியூகத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவிக்கு விசுவாசம் காட்டும் வகையில் மஹிந்தவின் வெற்றிக்கு உழைத்தார்.
அவரது வியூகத்தால் கட்சியோ, வாக்களித்த மக்களோ எதுவித பயனும் பெறவில்லை. தனது சுயநலனுக்காக வியூகம் வகுக்கின்ற பஷீர் சேகுதாவூத்துக்கு இம்முறை இடமளித்தால், கட்சி இன்னும் பல மடங்கு வீழ்சியடையும் என்பதுடன் கட்சியின் வீழ்ச்சிக்கு தலைமையே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியேற்படும் என தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago