2025 மே 16, வெள்ளிக்கிழமை

'மனிதர்களாலேயே குழப்பங்கள் ஏற்படுகின்றன'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 02 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஆறறிவுடன் படைக்கப்பட்ட மனிதர்களாலேயே உலகில் குழப்பங்களும் நெருக்கடிகளும் தோன்றுகின்றன. மனிதன் மனிதனுக்கு மட்டும் கேடு செய்யவில்லை.  ஒட்டுமொத்த படைப்பினங்களுக்கும் தீங்கு செய்கின்றான் என்று மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.எல். அப்துல் வாஜித் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சிக் கல்லூரியில் நேற்று  புதன்கிழமை மாலை இடம்பெற்ற புனித றமழான் நோன்று துறக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'மனிதர்கள் பகுத்தறிவுடன் படைக்கப்பட்ட அற்புதப் பிறவிகள். மனிதனுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை கட்டமைப்புக்களும் இறைவனால் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், மனித செயற்பாடுகளால் இந்த உலகம் அமைதி இழந்து தடுமாறிக்கொண்டிருக்கின்றது' என்றார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி வி.விவேகானந்தலிங்கம், மட்டக்களப்பு அஞ்சல்; பயிற்சி நிலைய பிரதம போதனாசிரியர் பி.நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .