2025 மே 16, வெள்ளிக்கிழமை

சு.க. வுடன் சுபைர் இணைவு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,  ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபை உறுப்பினரான எம்.எஸ்.சுபைர்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சனிக்கிழமை (11) இணைந்துகொண்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அணியில் இணைந்து   மட்டக்களப்பு வேட்பாளராக தான் களம் இறங்கியுள்ளதாக எம்.எஸ்.சுபைர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்தும் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்வதாக எம்.எஸ்.சுபைர் கடந்த வெள்ளிக்கிழமை (10) அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே,  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் அவர் இணைந்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமாக எம்.எஸ்.சுபைர் பதவி வகித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .