2025 மே 16, வெள்ளிக்கிழமை

'யுத்த வடுக்கள் ஆறாத நிலையில் தமிழர் வாழ்கின்றனர்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 13 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாத நிலையில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்  ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தவர்களாக, அபிலாஷைகள் நிறைவேற்றப்படாதவர்களாகவும் வாழ்கின்றார்கள்.  'ஏனைய சமூகத்தவர்களை போன்று தமிழ் மக்களும்  சமமான உரிமையை பெற்று வாழவேண்டும். அதையே தமிழ் மக்களும்  விரும்புகின்றனர். தமிழ் மக்களுக்கான சமத்துவம், சமவாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலேயே சுயநிர்ணம் நாடி அவர்கள்  தங்கள்  குரலை ஒலிக்கச்செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்' என்றார்.

'பல்வேறுபட்ட பாதிப்புக்களையும்  சுமந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும். இந்த சூழ்நிலையில் முக்கியமான ஒரு தேர்தலாக  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்தலை  தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்தவேண்டும். அத்துடன்,  தமிழ் மக்களின் உரிமைகளை பெறவும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காகவும் நாம் செயற்படவேண்டியுள்ளது' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .