2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க. பலம் வாய்ந்த கட்சியாக திகழ்கின்றது:அமீர் அலி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 14 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஐக்கிய தேசியக் கட்சி பலம் வாய்ந்த கட்சியாக தற்போது திகழ்கின்றது. இந்நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் இக்கட்சிக்கே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சாரைசாரையாக வந்து வாக்களிப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுவை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (13)  தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இந்த மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலுள்ள தடைகளை உடைத்தெறிந்து, சமூக ஒற்றுமையுடன் செயற்படக்கூடிய ஓர் அணியினரை ஐக்கிய தேசியக் கட்சி களம் இறக்கியுள்ளது. இன, மத பேதம் இல்லாமல் இணைந்து செயற்படக்கூடிய நிலையை நாங்கள் இங்கு காணமுடியும்' என்றார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெற்று இன ஒற்றுமையின் பாலமாக மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்துக்கு வித்திடும் முதன்மை தேர்தலாகவும் இந்த நல்லாட்சியில் நாங்கள் செயற்படவுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கியக் தேசிய கட்சி முதன்மையாக இருக்கும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .