2025 மே 16, வெள்ளிக்கிழமை

'மஹிந்தவுக்கும் எமக்கும் தொடர்பில்லை'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 14 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தங்களுக்கும் இடையில் எந்தவித  தொடர்பும் கிடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலேயே தாம் போட்டியிடுவதாகவும்  முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (13)  வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு  தொடர்ந்து தெரிவித்த அவர், 'மக்கள் வழங்கிய  ஆணையை  மதித்து ஊழல் அற்ற, நேர்மையான நல்லாட்சியை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாம் அணி திரண்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள் அரசியல் வருகைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என்றார்.

'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இத்தேர்தலில் நாங்கள்  போட்டியிடுகின்றோம். இம்மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் முன்வைக்காத ஒரு யோசனையுடன்  இத்தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்களது கட்சிக்கு வாக்களிக்கும்போது, ஒரு தமிழ் மகனையும் ஒரு முஸ்லிம் மகனையும் நாடாhளுமன்றத்துக்கு தெரிவுசெய்ய முடியும். அத்துடன்,  எதிர்வரும் 19ஆம் திகதி இந்நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய ஆட்சி ஏற்படும்போது, அரசாங்கத்தில் இந்த மாவட்டத்திலிருந்து இரண்டு சமூகங்களின் தலைமைத்துவமும் இருக்கும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .