Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 16 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அமல்புரம் வீட்டுத்திட்டக் கிராமத்தில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்கள் குடிநீர் வசதியின்றி அவதியுறுகின்றனர்.
யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்பதற்காக இந்த வீட்டுத்திட்டக் கிராமம் 04.06.2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்தக் கிராமத்தில் வசிக்கும் தாங்கள், குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகவும் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் சென்று குடிநீரை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்ட பொதுக்கிணறு ஒன்றும் குழாய்க்கிணறும் பழுதடைந்துள்ளதுடன், இவற்றிலிருந்து பெறப்படும் நீரும் அருந்துவதற்கு உகந்ததாகவும் இல்லையென்றும் இம்மக்கள் கூறுகின்றனர். எனவே, தங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறும் இம்மக்கள் கோருகின்றனர்.
இந்த வீட்டுத்திட்ட கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசத்திடம் நேற்று புதன்கிழமை கேட்டபோது, 'இந்தக் கிராமத்தில் எமது பிரதேச சபையினால் ஏற்கெனவே பொதுக்கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இருப்பினும், இங்கு காணப்படும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் எமது கவனத்துக்கு இதுவரையில் கொண்டுவரப்படவில்லை. எதிர்காலத்தில் இங்கு கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago