Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
இலங்கையில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடைபெறும் என்று நம்புவதாக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆசிய வலையமைப்பின் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று வியாழக்கிழமை மாலை விஜயம் செய்த கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ், உதவித் தேர்தல் ஆணையாளர், பொது அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மதத்தலைவர்களை சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசித்தனர்.
பெவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் வேண்டுகோளின் பேரில் சுதந்திரமான தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பின் சர்வதேச கண்காணிப்பாளர்களான சாரா அன்வர், பிலிதும் ட்ரயகேசம் தலைமையிலான குழுவினர் இந்த கண்காணிப்புகளை மேற்கொண்டனர்.
இலங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தலின்போது வேட்பாளர்களின் செயற்பாடுகள், வாக்காளர்களின் நிலைமை, தேர்தல் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
தங்களுக்கு இதுவரையில் எதுவித தேர்தல் முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. தாங்கள் சென்ற பகுதிகளில் நிலைமை சுமுகமாக இருந்தது. எதிர்வரும் தேர்தல் நீதியான நேர்மையான முறையில் நடைபெறுவதற்கான சூழல் நிலவுவதை காணமுடிவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025