2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

210 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் ஆரையம்பதி பிரதேச சபை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 07ஆம் திகதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைவரை (12) 210 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சுனாமி கால்நடை மக்கள் கூட்டமைப்பின் முகாiமாயாளரும் கால்நடை வைத்தியருமான ஆர்.தினேஸ் வெலவ்வௌ தெரிவித்தார்.

அத்துடன், 290 நாய்களுக்கு தடுப்பூசி இடப்பட்டுள்ளன.

சுனாமி கால்நடை மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கால்நடை வைத்திய சுகாதார  அலுவலகம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகம், மட்டக்களப்பு சுகாதார அலுவலகம், மட்டக்களப்பு மாநகரசபை ஆரையம்பதி சுகாதார அலுவலகம், ஆரையம்பதி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் நாய்களுக்கு  கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாநகரசபை பிரிவில் 3 தினங்களும் ஆரையம்பதி பிரதேச சபை பிரிவில் 3 தினங்களும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இனப்பெருக்கத்தை குறைப்பதற்கும் நீர்வெறுப்பு நோய் ஏற்படுவதை தடுப்பதற்குமாக கருத்தடை சிகிச்சையும்  தடுப்பூசியும் இடப்படுவதும் முன்னெடுக்கப்பட்டதாக  சுனாமி கால்நடை மக்கள் கூட்டமைப்பின் கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் ஜுட் சுவேன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X