Princiya Dixci / 2021 ஜூன் 14 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எஸ்.எம். ஹனீபா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றாளர்கள் 68பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
“ஏறாவூர் சுகாதார பிரிவில் 16 பேரும், செங்கலடி சுகாதார பிரிவில் 15 பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 11பேரும், பட்டிப்பளை சுகாதார பிரிவில் 08 பேரும், காத்தான்குடி சுகாதார பிரிவில் ஐவரும், களுவாஞ்சிகுடி பகுதியில் நால்வரும் ஓட்டமாவடி சுகாதார பிரிவில் மூவரும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இருவருமாக இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) வரை 19,959 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 19,464 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 16,063 பேருமாக, கிழக்கு மாகாணத்தில் கடந்த 05 நாட்களில் 55,757 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக, ஏற்றப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இன்று (14) தெரிவித்தார்.
8 minute ago
16 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
32 minute ago
35 minute ago