2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

28 பேருக்கு செயற்கைக்கால்கள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் கால்களை இழந்த  21 பேருக்கு  இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து  ஓகஸ்ட் மாதம்வரை செயற்கைக்கால்கள் பொருத்தப்பட்டுள்ளதாக 'நம்பிக்கை ஏணி' நிறுவனத்தின்   பணிப்பாளர் எல்.ஆர்.டேவிட்  தெரிவித்தார்.

அத்துடன், ஏற்கெனவே செயற்கைக்கால்கள் பொருத்தப்பட்டிருந்த 07 பேரின் செயற்கைக்கால்கள் பழுதடைந்த நிலையில் அவர்களுக்கும் செயற்கைக்கால்கள் இக்காலப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமது நிறுவனத்தால் உயர்தரமுடைய சுமார் 07 தொடக்கம் 08 வருடங்களுக்கு பாவிக்கக்கூடிய செயற்கைக்கால்கள் பொருத்தப்படுவதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அவர் கூறினார்.

மேலும், தமது வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வைத்திய வசதி, தேக அப்பியாசப்பயிற்சி, பேச்சுப்;பயிற்சி, செவிமடுக்கும் பயிற்சி; ஆகியன முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் இவர்களுக்கு காதுகேள் கருவிகள்,  முச்சக்கர நாற்காலிகள், செயற்கைக்கால்கள் வழங்கப்படுகின்றன.  சுயமாகத் தொழில் செய்து வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான பயிற்சிகளும் வாழ்வாதார உதவிகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மண்முனை வடக்கு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில்  இதுவரையில் சுமார்; 1,250  மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான நலனோம்பு விடயங்களில் தமது தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

இதற்கென 03 வருடத்திட்டம் யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் தென்பகுதியில் செயற்படும் 'நவஜீவன' அமைப்பு ஊடாக கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X