Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நேற்றுக்காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. பரீட்சை நிலையத்துக்கு முன்பாக பரீட்சையில் தோற்றுவதற்காக பெற்றோர்களுடன் மாணவர்கள், இறைவழிபாடுகளில் ஈடுபட்டதனைக்காண முடிந்தன. நாடெங்கிலும் 2995 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு, 3 இலட்சத்து 39 ஆயிரத்து 360 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற விண்ணப்பித்திருந்ததாக பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித அறிவித்திருந்தார். இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, மாணவர்கள் ஆலய குருமாரின் ஆசியை பெற்றுக் கொண்டதுடன் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வணங்கி பரீட்சை நிலையத்தினுள் நுழைந்ததையும் அவதானிக்க முடிந்தது.
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago