2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300 பேருக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்  


வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி  மட்டக்களப்பு  மாவட்டத்தின் கிரான்குளம், தருமபுரம் நலன்புரி நிலையத்தில்  தங்கியிருப்பவர்களில் சிலர்,  வயிற்றோட்டம்; மற்றும்  சிரங்கினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு புதன்கிழமை (24)  சிகிச்சை அளிக்கப்பட்டது.


நடமாடும் மருத்துவ சேவை மூலமாக 300   பேர் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.


தொடர்ந்து அடை மழை பெய்கின்ற நிலையில், தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன.  


இந்த நிலையில்,  ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமையவும்  பிரந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளரின் பணிப்புக்கு அமையவும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தலைமையிலான குழுவினரால்  மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X