2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

35 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தால்  வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 35  மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு  நேற்று சனிக்கிழமை (04) வழங்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் எஸ்.எம்.அன்ஸார் தெரிவித்தார்.

மேற்படி நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் எம்.எச்.எம்.சனூஸ் தலைமையில் ஏறாவூர்,  ஆறுமுகத்தான் குடியிருப்பிலுள்ள கல்வி அபிருத்திச்சபை அலுவலகத்தில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது.

கல்வியில் திறமைச் சித்திகளைப் பெற்ற  தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 35 பேருக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்பு நிதியாக 1,200 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பெல்ஜியம் நாட்டின் பிரஸெல்ஸிலுள்ள பிரிட்டிஷ் பாடசாலைகள்  நிறுவனத்தினூடாக இந்த கல்வி ஊக்குவிப்புக் கொடுப்பனவு மாதாந்தம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊக்குவிப்பு உதவிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள், மேலும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் இவர்களுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகஸ்தர் ஏ.எம்.எம்.அலியார், சமூகத்தொண்டரும் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம். நஸீர், ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலய அதிபர் எஸ்.தில்லைநாதன்,  றஹுமானியா வித்தியாலய பிரதி அதிபர் எம்.ஐ.அப்துல் றஸ்ஸாக், நிறுவன அலுவலர்களான கே.எம்.பதுறுஸ்ஸான், ஏ.எல்.அப்துல் ஹபீல், எம்.எம். பரீஸ், எம்.ஏ.எம். தாஹிர் உட்பட மாணவர்கள், பெற்றோர் ஆகியோரும் கலந்து nhகாண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X