2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ள பாதிப்புக்குள்ளான 390 குடும்பங்களுக்கு பாய்கள் விநியோகம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த 390 குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை (30) பாய்கள்  வழங்கப்பட்டதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் 240 குடும்பங்களுக்கும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் சித்தாண்டிக் கிராமத்தில் 150 குடும்பங்களுக்கும் பாய்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X