2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

52 வருடங்களின் பின் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக மாணவரொருவன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளான்.

1962ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 52 வருடங்களின் பின் முதல் தடவையாக பி. மிருசனன் என்ற மாணவன் 162 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் ஸ்ரீவாலராஜ் தெரிவித்தார்.

சித்தியடைந்த மாணவனுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இன்று (29) திங்கட்கிழமை தனது அலுவகத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்தார்.

சித்தி பெற்ற மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X