2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நாவலடியில் 550 கால்நடைகள் குளிரினால் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.எப்.காமிலா பேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவலடிப் பிரதேசத்தில் நிலவிய குளிர் காரணமாக இதுவரையில் 550 கால்நடைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக  காவத்தமுனை கால்நடை அபிவிருத்தி சங்க உத்தியோகஸ்தர் எம்.டி.எம்.ரமீஸ் திங்கட்கிழமை (29) தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவந்ததுடன், அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த நிலையில், மேற்படி பிரதேசத்தில் 300  மாடுகளும்     250  ஆடுகளும்  குளிர் காரணமாக உயிரிழந்துள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்களது கால்நடைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் கால்நடையாளர்கள் தமது சங்கத்தில் திங்கட்கிழமை (29) காலையிலிருந்து தெரியப்படுத்திவருவதாகவும் அவர் கூறினார்.  

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X