2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ரூ.70 மில்லியன் செலவில் ஏறாவூர் நகரசபையின் வீதி அபிவிருத்தி திட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 16 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் நகர சபையின் ஒரு வருடப்பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளின் தொடக்க விழா இன்று சனிக்கிழமை பகல் ஏறாவூர் நகரில் இடம்பெற்றது. இந்நிலையில், ஏறாவூர் நகரிலிருந்து புன்னைக்குடா கடற்கரை வரை உள்ள வீதி ஏழு கோடி ஐம்பது லட்ச ரூபாய் செலவில் நவீன கார்பெற் வீதியாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான பெயர்ப்பலகையை   விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஏறாவூர் நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்வுகளில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரட்னாயக்க, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியூமல் பெரேரா, சிரேஷ்ட அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .