Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 17 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் 2004ஆம் ஆண்டு முதல், பல்வேறு வெற்றிகரமான வேலைத்திட்டங்களை பாம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
USAID நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடைபெற்றுவரும் 3 ஆண்டு காலச் செயற்றிட்டத்தின் முதல் ஆண்டு (2017) நிறைவின் போது, கிழக்கு மாகாணத்தில் வாழும் வறிய 1,730 குடும்பங்களுக்கு தூய குடிநீரை, இலங்கை நீர் வழங்கல் அதிகாரசபையுடன் இணைந்து, அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
மேலும், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 15 பாடசாலைகளுக்கும் நீர் விநியோகம் வழங்கப்பட்டதுடன், இதனூடாக 1,592 ஆண் மாணவர்களும் 1,658 மாணவிகளும் நன்மை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஏறாவூர்பற்று பிரதேச சபையின் செயலாளர் கதிரவேல்பிள்ளை பேரின்பராஜா, “கிராமப்புறங்களில், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பாம் நிறுவனம், தமது பங்களிப்பைச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அதிலும், அனர்த்த நேரங்களில் முகாமாகச் செயற்ப்படக்கூடிய இடங்களுக்கு நீர் விநியோகம் வழங்கப்பட்டமை, தமது பிரதேச சபையின் மிக பெரிய சவாலுக்குப் பதிலாக அமைந்திருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வெள்ள நேரத்தில் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்ற அதேநேரம், பிரதேச சபையின் செலவும் குறைக்கப்பட்டதெனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்கான செலவு, பிரதேச சபைக்குக் குறைந்துள்ளது என்றும், அந்த நிதியை, நாம் வேறு சமூக நலன்களுக்குப் பயன்படுத்துவதாகவும், பிரதேச சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
குடிநீர் விநியோகம், வாழ்வாதார அபிவிருத்தி, கடல் மற்றும் களப்பு வளப்பாதுகாப்பு, சுகாதார மேம்படுத்தல், பால்நிலை சமத்துவம், அனர்த்த அபாய குறைப்பு உள்ளிட்ட வேலைத்திட்டங்களை, அரச மற்றும் ஏனைய பங்குதாரர்கள், பயனாளிகளின் பங்களிப்போடு, பாம் நிறுவனம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .