2021 ஜூன் 19, சனிக்கிழமை

திருமதி சின்னத்துரை சிவகாமி

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: திருமதி சின்னத்துரை சிவகாமி

காரைநகர், பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், 74, சிவன் பண்ணை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்துரை சிவகாமி 29.08.2010 ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதி சின்னத்துரையின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சிவபாதம் (இலங்கை வங்கி, யாழ்.2ஆம் கிளை, வாடிக்கையாளர் சேவை முகாமையாளர்) மற்றும் கந்தசாமி, சற்குணராசா (முகாமை உதவியாளர், வலயக்கல்வி அலுவலகம், வலிகாமம்), மகேஸ்வரி (பாரெய்ன்), சிவராசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்- தேவகி, கேதீஸ்வரி, மோகனா, சாந்தினி, நாகேந்திரம், சித்திரா ஆகியோரின் மாமியாரும்- தவச்செல்வி, தவறஜனி, தவவதனி, கீதாஞ்சலி, கார்த்திகா, ராம்சன், ரங்கன், திருமகள், காருண்யா, கஜந்தன், கஸ்தூரி, தயாழினி, தவகுமார், மனோகுமார், மதுரா, சரண்யா, தரண்யா ஆகியோரின் பேத்தியும் கிர்ஷிகன், கோபிகன், பைரவி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.08.2010) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் பி.ப. 4 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்:சி.சற்குணராசா (மகன்).


74, சிவன்பண்ணை வீதி,
யாழ்ப்பாணம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .