Editorial / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பதில், பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எப்போதும் குழந்தைகளுக்கு, அவர்கள் படித்தவுடன் எழுதிப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே, படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு, இந்த முறையை அவசியம் பின்பற்றினால் மிகவும் நல்லது.
உங்கள் குழந்தைகளை குறைந்தது 8 மணி நேரமாவது நித்திரைக்கொள்ள விடவும். மேலும் இரவில் சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மாச்சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிமானமாகும் உணவை கொடுப்பது நல்லது. ஏனெனில், மாச்சத்துள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.
வேலைகளைச் சீக்கிரம் முடித்து விட்டு, சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது மூளைக்குப் போதிய ஓய்வைக் கொடுத்து, நினைவுத்திறன் சிறப்பாகச் செயற்படத் துணை செய்யும்.
சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும், மூளை சிறப்பாகச் செயற்படத் துணை செய்யும். ஞாபக சக்திக்குக் காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையைச் சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை, உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்குக் கொண்டு வந்து விடும்.
உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதாகக் கருதி, உணவைக் குறைத்தால் அது மூளை இயக்கத்தைத் தடை செய்து, ஞாபகசக்திக் குறைவை ஏற்படுத்தலாம். எனவே, இத்தகையப் பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.
10 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago