Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.
தினமும் குளிப்பதற்கு முன் குப்பைமேனி இலைகளை அரைத்து பத்து நிமிடம் ஊறிய பின், குளித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள சொறி, சிரங்கு, அரிப்பு நாளடைவில் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களையும் காய்களையும் உணவில் சேர்த்துக் கொண்டால், தோலில் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நம்மை அண்டாது. கார்போக அரிசி, பாசிப்பயிறு இரண்டையும் அரைத்து உடலில் தேய்த்து குளிப்பதால் தோல்நோய் வருவதை தவிர்க்கலாம்.
வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் அரைத்து தினமும் தேய்த்துக் குளிக்க தோலின் நிறம் கூடும். வேப்பிலை ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது.
அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து தேமல், தடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் நல்ல பயன் தரும்.
11 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago