Janu / 2026 மார்ச் 12 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகம, நியதகல மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த மூன்று மாத குழந்தையின் சடலத்தை தோண்டி, அதிலிருந்த தங்க ஆபரணங்களை திருட முயன்ற நபரை தேடி ஹோமாகம தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் புதன்கிழமை (11) மாலை மயான பொறுப்பாளர் சந்தித்து, தனது தந்தையின் கல்லறையை சுத்தம் செய்ய வேண்டும் என கூறி மயானத்திற்குள் செல்ல அனுமதி பெற்றுள்ளார்.
இருப்பினும், குறித்த நபர் நீண்ட நேரமாகியும் மயானத்தை விட்டு வெளியேறுவதை மயானப்பொறுப்பாளர் அவதானிக்காதனால் சந்தேகமடைந்த அவர், மயானத்திற்குள் சென்று சோதனையிட்ட போது, சந்தேக நபர் , அண்மையில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சடலமொன்றை தோண்டி எடுப்பதற்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மயான பொறுப்பாளர் இது குறித்து உடனடியாக ஹோமாகம பிரதேச சபையின் அதிகாரிகளுக்கு அறிவித்ததோடு, பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்டிருந்த மூன்று மாத குழந்தையின் சடலம் வைக்கப்பட்டிருந்த குழியே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளமை தெரியவந்தது.
குழந்தை அணிந்திருந்த தங்க ஆபரணங்களை சூறையாடும் நோக்கிலேயே இச்செயல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago