A.P.Mathan / 2012 நவம்பர் 07 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

எமது கால்களில் இருக்கின்ற நாளங்கள் புடைப்படைந்து முடிச்சுளாக அல்லது முறுக்கடைந்த வகையில் வெளியில் தெரிவதனையே நாம் நாளமுடிச்சுகள் என்கின்றோம். இது எமது கால் நாளங்களில் இருக்கின்ற சில வேல்வுகள் தொழிற்படாத சந்தர்ப்பங்களில் பாதத்திலிருந்து எமது உடலின் மேல்நோக்கி செல்லும் இரத்தமானது ஓரிடத்தில் தேங்கி நிற்பதனாலேயே ஏற்படுகின்றது.
எனவே நாளமுடிச்சுகள் உள்ளவர்கள் அதனை சாதாரணதொரு விடயமாக கருதி கவனயீனமாக இருக்கக் கூடாது, காரணம் இந்த நாளமுடிச்சுகளில் ஏதேனும் சந்தர்ப்பங்களில் இரத்தக் கசிவு ஏற்படுமாயின் அதனால் எமது உயிருக்கே கூட பாதிப்பு ஏற்பட்டு விடும்.
இப்புண்கள் நோயாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களையே ஏற்படுத்துகின்றது. காரணம் அதிலிருந்து நீர் போன்ற திரவம் எந்நேரமும் வடிந்து கொண்டே இருக்கும். பொது இடங்களுக்குச் செல்ல முடியாதளவுக்கு அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் ஆடைகளையும் அது ஈரளிப்பாக்கி விடும்.

மேலும் டுப்லைஸ் ஸ்கேன் எனப்படும் ஓர் அறுவை சிகிச்சை மூலமும் நாளமுடிச்சு நோயிலிருந்து முற்றாக குணமடைந்து கொள்வதுடன் காலில் ஏற்படும் புண்களையும் இல்லாமலாக்கிக் கொள்ள முடியும். நாளமுடிச்சுள்ளவர்களின் காலில் ஏற்படும் புண்களை அறுவை சிகிச்சை மூலம் மாத்திரமே குணப்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான விடயமுமாகும்.16 minute ago
31 minute ago
49 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
49 minute ago
59 minute ago