2021 மே 15, சனிக்கிழமை

’அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு கிடைக்காது’

மொஹொமட் ஆஸிக்   / 2020 மார்ச் 15 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் மக்களிடம் கோரும் 3இல் 2 எனும் பெரும்பான்மையை, பொதுத் தேர்தலில் அரசாங்கம் ஒருபோதும் பெற்றுக்கொள்ளாது என, மக்கள் விடுதலை முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் அவர், நேற்று (14) கண்டியில் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தத்தை வென்ற காலத்தில் கூட, ராஜபக்ஷர்களால், மூன்றில் இரண்டு பங்கை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அப்படியாயின் இப்போது எவ்வாறு அப்படி பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் வினவினார்.

ஏற்கெனவே அவர்கள் வெற்றிபெற்ற தேர்தலில், 18ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, ஜனநாயகத்தை பாதகத்துக்குள் தள்ளிவிட்டனர் என்றும் எனவே, நாடாளுமன்றத்தில் பணத்துக்கு விலைபோகாத உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .