2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு மலைகத்தவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

Niroshini   / 2016 மார்ச் 04 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா திருஞானம்

மலையகத்தில் நிவர்த்தி செய்ய விகிதாசார பொறிமுறைக்கு அமைய இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு  மலைகத்தவர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்ககப்பட வேண்டும் என கல்வி இராஜங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழில்வான்மையாளர்களின் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (03) மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை 1948இல் சுதந்திரம் அடைந்த போதும் மலையகம் 1986 ஆம் ஆண்டே சுதந்திரம் அடைந்தது. இடைபட்ட காலம் நாடற்வர்களாக, பிரஜா உரிமை இன்றி வாழ்ந்து வந்தோம்.  1986ஆம் ஆண்டு தான் எமக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதன்  பின்னரே, மலையக மக்களின் குறிப்பாக பிரஜா உரிமை, அரச உரிமைகள், கல்வி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் கிடைக்க பெற்றது.

கல்வியை பொருத்தவரையில் 1977ஆம், 1980ஆம் ஆண்டு காலப்பகுதியல் தோட்ட பாடசாலைகள் அரசாங்கம் பொறுபேற்ற போதும். 1986க்கு பின்னரே இலவச கல்வியாக வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.

இது தற்போது ஏனைய சமூக கல்வி வளர்ச்சியில் 40 வருட பின்னடைவையும் காட்டுகின்றது. இதனாலேயே தற்போது மலையக்தில் கல்விதுறையில் உயர் பதவிகளுக்கு குறிப்பாக, இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்வாங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  குறைவாக காணப்படுகின்றது.

இதனால், மலையகத்தின் கல்வி பின்னடைவை நோக்கி செல்ல காரணமாக இருந்து வருகின்றது. தற்போது கிட்டதட்ட 20 பேர் மாத்திரமே கல்வி நிர்வாக சேவையில் இருக்கின்றனர். மலையத்துக்கு இன்னும் 130 பேர் தேவையாக உள்ளனர்.

தற்போது தான் மலையகம் கல்வியில் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கின்றது, அதே போல் நிர்வாக சேவையிலும் குறைபாடுகள் காணப்பட்ட போதும், இங்கு கல்வி நிர்வாக சேவையும், நிர்வாக சேவையும்   ஒன்றாக கருத வேண்டும். இரண்டுமே சமபலமிக்கதாகவே காணப்படுகின்றது.

இந்த குறையை குறிப்பாக மலையகத்தில் நிவர்த்தி செய்ய விகிதாசார பொறிமுறைக்கு அமைய இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு  மலைகத்தவர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குப்பட வேண்டும்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழில்வான்மையாளர்களின் சங்கம், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் எதிர்காலத்தில் மலையகத்தில் குறைபாடாக இருக்கும் இலங்கை கல்வி நிர்வாக சேவை,  தொழில்ல்வான்மையாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அதற்குரிய புதிய பொறிமுறை ஒன்றையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மலையகத்தின் கல்வி நிர்வாக சேவை அபிவிருத்தி செய்யப்படும். வளங்களை எங்களால் வாரி அள்ளி வழங்க முடியும். இதனை அவ்வாறு செய்ய முடியாது. இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீட்சைக்கு தோற்றுபவர்களில் பெரும்பாலானோர் சித்தியடையாமை இந்த குறைபாட்டுக்கு ஒரு காரணமாக இருந்து வருகின்றது.

அதற்கு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்கள்  நன்கு படிக்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய பயிற்சிகளையும் கருத்தரங்குகளையும் அமைச்சின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .