2021 மே 14, வெள்ளிக்கிழமை

கட்டடத்திலிருந்து விழுந்த இளைஞன் பலி

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை  நகரிலுள்ள குடா ரத்வத்த மாவத்தையில்  நிர்மாணிக்கப்பட்டுவரும் 17 மாடிக் கட்டிடத்தொகுதி ஒன்றில் பணிபுரிந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர், அதன் ஐந்தாம் மாடியிலிருந்து  கீழே  விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள இளைஞன்,  கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், ராஜாங்கனையைச் சேர்ந்த சஞ்ஜுக நுவன்சிறி என்ற இளைஞனே, இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .