2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கலாசார மண்டபத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழும் குடும்பங்கள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேற்றப்பட்ட தலவாக்கலை - லிந்துலை மவுசாஎல்ல தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள், தோட்டத்திலுள்ள கலாசார மண்டபத்தில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 10 குடும்பங்கள் வாழும் லயன் குடியிருப்பொன்று, ஏப்ரல் மாதமளவில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டது.

இதனையடுத்து அக்குடியிருப்பில் வசித்து வந்த 29 பேர் வெளியேற்றப்பட்டதுடன், அவர்கள் மேற்படிக் கலாசார நிலையத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டனர்.

கலாசார மண்டபத்தில் திறைச்சீலை மறைப்பை ஏற்படுத்தியே ஒவ்வொருக் குடும்பங்களும் வாழ்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

கைக்குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் தாம், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றியும் சுகாதார வசதிகளின்றியும், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக மேற்படிக் குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

தாம் தமது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டபோது, மக்கள் பிரதிநிதிகள் பலர் தம்மை வந்துப் பார்த்ததுடன் பாதுகாப்பான இடத்தில் நிறந்தரமாகத் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வாக்குறுதி வழங்கிச் சென்றனர் என்றும் ஆனால், இதுவரை வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் அடிப்படை வசதிகள்கூட ஏற்படுத்தித் தரவில்லை என்று மேற்படிக் குடும்பங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .