Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா - கிளாசோ தோட்ட மத்தியப் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவினால், 2 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் தங்களின் உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, மண்சரிவு காரணமாக வீட்டின் சுவர்களின் எல்லா பகுதிகளிலும் பாரிய வெடிப்புகள் காணப்படுவதுடன், சுவர்களும் சரிந்து விழ கூடிய ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி இரவு அப்பகுதியில் பெய்த கடும் மழையினால், வீட்டின் பின்புறத்தில் இருந்த மதில் சரிந்து விழுந்ததில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க தொலைக்காட்சி பெட்டி, தளபாடங்கள், உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பல சேதமாகியுள்ளன.
மேலும், அப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை முன்னெடுத்து வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா பிரதேச செயலகம் உணவு பொதிகளை வழங்கி வருகின்றது.
இது குறித்து, தோட்ட அதிகாரிக்கு பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வழங்கியபோதும், தோட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுடைய விடயத்தில் அசமந்தபோக்கில் இருப்பதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.


21 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
1 hours ago