2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது

மு.இராமச்சந்திரன்   / 2017 மே 23 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட்டவளையிலிருந்து கெலிஓயாவுக்கு, டொல்பின் ரக வானில் கொண்டுச் செல்லப்பட்ட 1,103 கிலோ கிராம் கழிவுத் தேயிலையை, நாவலப்பிட்டிய பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளனர்.   

கம்பளை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

அனுமதிப்பத்திரமின்றி கழிவுத் தேயிலைகொண்டுச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி- கினிக்தேனை 2 ஆம் கட்டை பகுதி வழியாக பயணித்த வானை வழிமறித்து சோதனை செய்த பொலிஸார், அதிலிருந்து, கழிவுத் தேயிலை மூடைகள் 62 ஐ கைப்பற்றியுள்ளனர்.  

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .