2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

சிறுவன் மரணம்: சாரதி பிணையில் விடுவிப்பு

Kogilavani   / 2016 மார்ச் 03 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்

நுவரெலியா, ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ கல்லூரி மாணவனின் மரணத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை, ஒன்றரை இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் பத்தாயிரம் ரூபாய் காசு பிணையிலும் செல்லுமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் ஐ.ஆர்.டி.இந்திக்க நேற்று(2) உத்தரவிட்டார்.

கடந்த 23 ஆம் திகதி,  நுவரெலியா, ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேலியில், தனியார் பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அப்பாடசாலையில், தரம் 4 இல் கல்வி பயின்று வந்த எம்.சுகிர்தன் (வயது 9) என்ற மாணவர் உயிரிழந்தார்.

சிறுவனின் மரணத்துக்கு காரணமான பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சந்தேக நபரை, புதன்கிழமை(2) நீதிமன்றில் ஆஜர்செய்தபோதே  நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார். இதேவேளை, இவ்வழக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி 24 ஆம் திகதி காலை உயிரிழந்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த புஸ்ஸல்லாவையைச் சேர்ந்த பெண்ணொருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X