Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 மார்ச் 01 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கையில் இருந்த ஒரு மாத குழந்தை வீதியில் விழுந்து விட்டதுகூட தெரியாமல், தாயொருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் - கொழும்பு வீதியின் குருமட்டிய பிரதேசத்தில் ஒரு மாத குழந்தை ஒன்று தாயின் கையிலிருந்து நழுவி பிரதான வீதியில் விழுந்து கிடப்பதை கண்டுபிடித்ததாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குழந்தையின் தாய் உள்ளிட்ட குழுவினர் நுவரெலியா அங்கிருந்து நீர்கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்த போது தாயின் உறக்கத்தினால் குழந்தை வீதியில் வழுக்கி விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியா சென்றுவிட்டு குழந்தையின் தாய் உட்பட இரு குடும்பங்கள் மீண்டும் நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த 28ஆம் திகதி நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதுடன், அதே வீதியில் முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்றில் பயணித்தவர்கள், வீதியில் குழந்தையொன்று கிடப்பதைக் கண்டு, கித்துல்கல பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
காரில் இருந்தவர்கள் சிறு குழந்தையை மீட்டு கித்துல்கல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் குழந்தையை கித்துல்கல வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் குழந்தை இல்லாததை அறிந்து திரும்பி, வீதியில் தேடிய போது அப்பகுதிவாசி ஒருவர் ஊடாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதை அறிந்து கித்துல்கல வைத்தியசாலைக்கு சென்றனர்.
சிறு கீறல் காயங்களுக்கு உள்ளாகியிருந்த குழந்தை, கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago