2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

திறந்த அழைப்பு

Kogilavani   / 2017 மே 22 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட தமிழ்மொழிமூலப் பாடசாலைகளில், ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் உள்ள தமிழ் மாணவர்கள் க.பொ.த.உயர்தர கல்வியை தொடர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாட்டங்களில் உள்ள தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக, மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல், எதிர்வரும் 28ஆம் திகதி காலை 10.30 மணிக்கு, காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.   

ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் கற்கும் தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிசெய்ய, உடனடியாகவும் நீண்டகால அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில், இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக, மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்தார்.  

இக்கலந்துரையாடலில், ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள், தனிநபர்கள் மற்றும் மக்கள்சார்பு அமைப்புகள் கலந்துகொள்ள வருமாறு, அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  

மேலதிக விபரங்களுக்கு 0716070644 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு, அவர் அறிவுறுத்தியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .