2021 மே 15, சனிக்கிழமை

நெற்செய்கையில் இளைஞர்களை உள்வாங்க நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

சப்ரகமுவ மாகாணத்தில், இளைஞர்கள் இரத்தினக் கல்சார் தொழில்களில் ஈடுபடுவதால், சம்பிரதாயபூர்வ நெல் விவசாயத்திலிருந்து விலகிச் செல்கின்றனர் என்றுத் தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, எனவே, இந்த மாகாணத்தில், நெற்செய்கையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த  விவசாயத்துறை சார் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல், விவசாய அமைச்சில் நேற்று (10) முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், விவசாயத்தின் முக்கியத்துவம் தொடர்பில், இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

எனவே, சப்ரகமுவ மாகாணத்தில் கைவிடப்பட்டுள்ள வயல் நிலங்களில் மீண்டும் நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்தில், இளைஞர்களை அதிகமாக உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் முதற்கட்டப் பணி, இரத்தினபுரி - கரவிட்ட பிரதேசத்திலுள்ள 250 ஏக்கர் வயல் நிலத்தில், இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 23,858 ஏக்கர் வயல் நிலத்தில் 52,56 ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்படுவதில்லை என்றும்,  காணிப் பிணக்குகள், நீர்ப்பாசன கால்வாய்கள் பாதிப்பு, இரத்தினக்கல் அகழ்வு, உயிரினங்களால் பாதிப்பு போன்ற காரணங்களால் இம் மாகாணத்தில் நெற்செய்கை முழுமையாகப் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .