2021 ஜூலை 29, வியாழக்கிழமை

போத்தல்களுக்கு பதிலாக குவளை

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிவித்திகல பிரதேச சபைக்கூட்டங்களுக்கு, இதுவரை காலமும், குடிநீருக்காக பரிமாறப்பட்டு வந்த தண்ணீர் போத்தல்களுக்குப் பதிலாக, குடிநீரைக் குவளைகளில் பரிமாறுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

இப்பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத் தொடரின் போதே, சபைத் தவிசாளரால் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  

இந்நிலையில், பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம், அபிவிருத்திக் கூட்டம் உள்ளிட்ட அபிவிருத்திக் கூட்டங்கள், விசேட கூட்டங்கள் ஆகிய அனைத்துக் கூட்டங்களின் போதும், குடிநீர்ப் போத்தல்களுக்குப் பதிலாக, குவளைகளில் நீர் பரிமாறப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

பிளாஸ்டிக் பாவனையைத் தடுத்து, வீண் செலவுகளைக் குறைக்கும் நோக்கிலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு, சபை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .