2021 ஜூன் 14, திங்கட்கிழமை

‘பௌத்த மதத்துக்கு முரணாக நடக்கின்றார் ஞானசாரர்’

எம். செல்வராஜா   / 2017 மே 22 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

   
“பௌத்த மதம் என்பது புனிதமான மதமாகும். அந்த மதத்தில், அனைவரும் போற்றக்கூடிய வகையிலான கோட்பாடுகள் உள்ளன. அக்கோட்பாடுகள் வாழ்க்கைக்கு அவசிய தேவைப்பாடுகளாக இருப்பதுடன், இன, மதங்களுக்கு இடையில் நல்லிணக்கமும் சௌஜன்யமும் உருவாகவும் வழிவகுக்கின்றன. பௌத்த மதத்தைப்போன்றே, பௌத்த குருமார்களும் அஹிம்சை வழியில் அமைதியைப் பின்பற்றி, அனைவருக்கும் முன்மாதிரியாக நடந்து கொள்ளல் வேண்டும். ஆனால், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் முற்றுமுழுதாக பௌத்த மதத்துக்கு முரணாக நடந்து, அனைவரது மனங்களையும் காயப்படுத்துகின்றார்” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,  

“கடந்த 1983ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட வன்செயலினால், நாடு மீளமுடியாத அபகீர்த்திக்கு உள்ளாகியது. இவ் அபகீர்த்தியின் வடுக்கள் இன்னும் மாறாத நிலையில், ஞானசாரதேரர் என்ற புத்தபிக்கு இவ்வாறு செயற்பட்டு வருவதை, உண்மையான நாற்றுப்பற்றாளர்களால் ஜீரணிக்க முடியவில்லை.  

இந்நாடு, ஆறறிவுள்ள மனிதர்களைவிட ஐந்து அறிவுள்ள ஜீவராசிகளுக்கும் பல்லின சமூகத்தவர்களுக்கும் சொந்தமானது என்பதை, அவர் புரிந்துகொள்ள வேண்டும்.  

இந்நாட்டிலுள்ள அனைவருமே வந்தேறு குடிகளாவர். முதலில் ஒரு சாராரும் பின்னர் ஒரு சாராரும் இந்நாட்டில் வந்து குடியேறினர். வரலாற்று நூல்களும் இதற்கு சான்றுபகர்கின்றன என்பதை அவர் நன்கு உணர வேண்டும்” என்று, அவர் மேலும் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .