2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவு: 9 பேர் பாதிப்பு

Editorial   / 2017 மே 27 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டத்தில், மண்மேடு சரிந்து விழுந்ததில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியிலுள்ள வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அங்கிருந்த 6 கோழிகள் உயிரிழந்தள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (26) பெய்த கடுமையான மழை காரணமாகவே, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதில் குறித்த வீட்டில் உரிமையாளர்கள் சுய தொழிலுக்காக 20 கோழிகளை வளர்த்துள்ளனர். மண்மேடு சரிந்து விழுந்த வீட்டின் பின்பகுதியில் இந்த கோழிகள் கூடு இருந்துள்ளது.

வீட்டின் பகுதியளவு சேதமடைந்திருப்பதால் அவ்வீட்டில் வசிக்கும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரிந்து விழுந்த மண்மேட்டை அகற்றும் பணியில் வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .