Kogilavani / 2017 ஜூன் 02 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியோடு, றம்பொட எல்பொட தோட்டத்தில் 100 வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து தழிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சின் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இந்திய அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கும் 50,000 வீடுகள் நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்ட நிலையில் மலையகத்துக்கான 4000 வீடமைப்புத் திட்டம் கடந்த 4 வருடங்களாக இழுபறி நிலையிலேயே உள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரமும் தழிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தோடு நடத்திய பலசுற்று கலந்துலையாடல்களுக்கு அமைவாக, தற்போது வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் 400 வீடுகளும் பொகவந்தலாவை செல்வகந்த தோட்டத்தில் 385 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
தற்போது றம்பொட எல்பொட தோட்டத்தில் 100 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப வைபவம் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து டயகம தோட்டத்தில் 150 வீடுகளினதும் பதுளை லெஜவத்த தோட்டத்தில் 100 வீடுகளினதும் நிர்மாணப் பணிகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அமைச்சரின் ஆலோசனைக்கேற்ப இவ்வீடடைப்பு திட்டத்தின் 2வது கட்டமானது நுவரெலியா, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முதற்கட்டத்தின் தொடர்ச்சியாக இவ் வீடமைப்பு திட்டங்களும் உடனடியாக ஆரம்பிக்கப்படவிருக்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago