2021 மே 14, வெள்ளிக்கிழமை

ஹோமாகம விபத்தில் மஸ்கெலியா இளைஞன் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கொட்டாவை பகுதியில், இன்று (26) இடம்பெற்ற விபத்தில், மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் (21) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மஹரகம பகுதியிலிருந்து ஹோமாகம நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, மோட்டார் சைக்கிள் அதன் வேகக் கட்டுப்பாட்டையிழந்து, வீதியில் அமைக்கப்பட்டிருந்த மதிலொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, கொட்டாவை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .