2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

விபத்தில் தப்பிச் செல்ல முற்பட்ட வாகனத்திலிருந்து பிக்கு வேடத்திலிருந்த நபர்கள் கைது

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாத்தளை பிரதான வீதியில் மஹிய்யாவ என்னும் இடத்தில் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இடைமறித்து விசாரணை நடத்திய பொழுது பிக்கு வேடத்தில் மதுபானம் அருந்திய நிலையிலிருந்த மூவறும் முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரினல்  நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கண்டி மஹிய்யாவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விட்டு தப்பிச் செல்லும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கைது செய்யும் போது பிக்கு வேடத்தில் இருந்தவர்கள் பொலிஸாருடன் மோதல் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கூறினர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .