2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

உடைந்த பாலத்தை திருத்தித்தர கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரிலிருந்து பெரிய பள்ளிவாசலுக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலம் உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அதனை வெகு விரைவில் திருத்தித் தருமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மத்திய மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப்பாலம் உடைந்த நிலையில் இருப்பதனால் புனித ரமழான் காலத்தில் அக்குறணை பெரிய பள்ளிவாசலுக்கு செல்வதில் மிகவும் கஷ்டமாகவுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .