2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மலையக தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு சௌமியமூர்த்தி தொண்டமானே காரணம் - பிரதமர் பெருமிதம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

மலையகத் தமிழ் சமூகத்துக்கு மாத்திரமின்றி இந்த நாட்டில் வாழுகின்ற சகல சமூகத்துக்கும் உதாரண புருஷராக செயற்பட்டவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆவார் என்று பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்தார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 98ஆவது பிறந்த தின நிகழ்வினை முன்னிட்டு நேற்று ஹட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அமரர் சௌமியமூர்த்தித் தொண்டமானின் உருவப்படத்திற்கு பிரதமர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.

இந்த நிகழ்வில் இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம், பாரர்ளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, மாகாணசபை உறுப்பினர்களான செந்தில் தொண்டமான், அனுஷியா சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர்தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :-

"இந்த நாட்டில் வாழுகின்ற பெருந்தோட்டச்சமூகம் இன்று இந்த அளவிற்கு முன்னேறியமைக்கு அமரர் சௌமியமூர்த்தித் தொண்டடானின் சிறந்த செயற்பாடுகளே காரணமாகும்.

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தொடக்கமுள்ள அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப்பதவிகளை வகித்து தோட்டத்தொழிலாளர் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மிகவும் கெடுபிடியான நிலைமையிலேயே தனது தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்த அவரை என்றும் நான் மறக்க மாட்டேன்.

அத்துடன், இவர் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்வுமற்றவர். தோட்டத்தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மின்சாரம் தேவை என்பதை முதல் முதலில் வலியுறுத்தியவர் இவர் தான் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட்டு தோட்டப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்தவர். இன்னும் தோட்டப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கபட வேண்டியுள்ளது. இதேவேளை, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .