2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கெலிஓயா ஊடாக பஸ் போக்குவரத்தை ஆரம்பிக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன் - கம்பளை)


கண்டி – கலுகமுவ வீதியில் கெலிஓயா ஊடாக இடைநிறுத்தப்பட்ட இ.போ.சபை பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலுகழுவ பாதையின் அவலநிலை காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இப்பாதையில் சேவையில் ஈடுபட்டு வந்த இ.போ.சபை கம்பளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டது.

எனினும் இப்பாதை புனரமைக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்த போதிலும் இது வரை பஸ் சேவையை ஆரம்பிப்பதில் உரிய அதிகாரிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பாதையில் தினமும் ஏராளமான பொதுமக்களும் கண்டி மற்றும் கம்பளை நகர பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தை நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .