2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பி.ரி.ஐ பற்றீரியாவை தெளிப்பதிலிருந்து அக்குறணை நீக்கப்பட்டமைக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

2009 ஆம் ஆண்டு இலங்கையில் மிகக் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்ட பிரதேசமான அக்குறணை பிரதேசத்தை பி.ரி.ஐ  பற்றீரியாவை தெளிப்பதிலிருந்து நீக்கியிருப்பதற்கு அக்குறணை பிரதேச இணைப்புக்குழு கூட்டம்  அதன் கண்டனத்தை தெரிவித்தது.

அக்குறணை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற இணைப்புக் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக்  இவ்வாறு தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் அக்குறணையிலேயே இனம்காணப்பட்டனர். இவ்வருடமும் வாரம் தோறும் டெங்கு நோயாளிகள் இனம்காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்குறணையை பி.ரி.ஐ பற்றீரியாவை  தெளிப்பதை விட்டு நீக்கி இருப்பதும் டெங்கு ஒழிப்புக்காக வழங்கும் உபகரணங்கள் வழங்காமலிருப்பதையும் இட்டு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

அக்குறணை பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். நஸீர் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான் பேசுகையில், டெங்கு ஒழிப்பதற்கு வழங்கப்படும் உபகரணங்கள் அக்குறணைக்கும் தேவைப்படுவதாகக்  கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .