Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தித்திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியினை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கையளிக்கும் நிகழ்வு நாளை 7ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் கொட்டகலையில் இடம் பெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் முக்கியஸ்தர்களும் தோட்டக் கமிட்டித்தலைவர்களும் தோட்டத்தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பத்தனை பொரஸ்கிரீக், குயின்ஸ்பெரி வெஸ்ட், நானுஓயா டெஸ்போர்ட் லோன் டிவிசன், கிளாஸ்கோ மேற்பிரிவு, தம்பத்தலாவ, தலவாக்கலை மட்டக்கெல, கிரேட்வெஸ்டன் லுசா, கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் கீழ்ப்பிரிவு, எதன்சைட் மேற்பிரிவு, லிந்துலை தங்ககெல, சலாங்கந்த, நுவரெலியா வெஸ்டோடா, கந்தப்பளை டிவிசன் ஆகிய தோட்டங்களின் வாழுகின்ற மக்களின் நலன் கருதி பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago