2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ரஞ்சன் ராமநாயக்க பொலிஸில் ஆஜர்

Super User   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(மொஹொமட் ஆஸிக்)

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நேற்று மாலை கட்டுகஸ்தோட்டை பொலிஸில் ஆஜரானார்.

கண்டி பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் பண மோசடி தொடர்பான  முறைப்பாடொன்றை  ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக செய்திருந்ததன் காரணமாகவே அவர் பொலிஸில் ஆஜராகியிருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க தன்னை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக குறித்த ஆசிரியை முறைப்பாடு செய்திருந்தார்.

இருப்பினும் தன்னுடைய அபிமானி என்ற வகையில் தவிர இப்பெண்ணுடன் தனக்கு வேறு எவ்வித தொடர்பும் இல்லையென ராமநாயக்க பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .